அல்காரஸை பழிதீர்த்து முதல் முறையாக விம்பிள்டன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்
இத்தாலியின் ஜானிக் சின்னர் முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
விம்பிள்டன் 2025
லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் ஆடவர் ஒற்றைப் பிரிவு இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் மோதினர்.
பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டிக்கு பின் மீண்டும் இருவரும் மோதுவதால், இப்போட்டிக்கு ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், கார்லோஸ் அல்காரஸ் (Carlos Alcaraz) முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார்.
ஆனால், அடுத்த மூன்று செட்களையும் 6-4, 6-4, 6-4 என்ற கணக்கில் ஜானிக் சின்னர் (Jannik Sinner) வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
முதல் 'இத்தாலி வீரர்'
இதன்மூலம் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் 'இத்தாலி வீரர்' என்ற சாதனையை சின்னர் படைத்தார்.
மேலும், பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் அல்காரஸிடம் அடைந்த தோல்விக்கு சின்னர் பழிதீர்த்துக் கொண்டார்.
வெற்றி பெற்ற சின்னருக்கு இந்திய மதிப்பில் ரூ.34 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அல்காரஸுக்கு ரூ.17 கோடி கிடைத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |