பண்ட், ஜடேஜா சொதப்பலில் சுருண்ட இந்தியா: போராடிய தமிழன்..நொறுக்கிய ஜென்சென்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா 201 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி பாலோஆன் ஆனது.
ஜெய்ஸ்வால் அரைசதம்
கவுகாத்தியில் நடந்து வரும் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. கே.எல்.ராகுல் 22 ஓட்டங்களில் ஆட்டமிழக்க யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். 
ஸ்கோர் 95 ஆக உயர்ந்தபோது யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 58 (97) ஓட்டங்களில் ஹார்மர் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த சாய் சுதர்சன் (15), துருவ் ஜுரெல் (0), ரிஷாப் பண்ட் (7), ஜடேஜா (6) மற்றும் நிதிஷ் குமார் (10) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஜென்சென், ஹார்மர் பந்துவீச்சில் நடையைக் கட்டினர். 
அப்போது அணியின் ஸ்கோர் 122 ஆக இருந்தது. இதனால் இந்திய அணி 150 ஓட்டங்களை கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
வலுவான கூட்டணி
ஆனால், 8வது விக்கெட்டுக்கு கைகோர்த்த வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் கூட்டணி வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தது.
குல்தீப் யாதவ் பெரிதளவில் ஓட்டங்களை எடுக்காவிடிலும் நிலைத்து நின்ற ஆட, வாஷிங்டன் சுந்தர் ஓட்டங்களை சேர்த்தார். 
இதன்மூலம் ஓரளவு அணியின் ஸ்கோர் உயர, சுந்தர் 48 (92) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் குல்தீப் யாதவ் 19 (134) ஓட்டங்களிலும், பும்ரா 5 ஓட்டங்களிலும் வெளியேற இந்தியா 201 ஓட்டங்களுக்கு சுருண்டது.
துடுப்பாட்டத்தில் மிரட்டிய மார்கோ ஜென்சென் (Marco Jansen) 48 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹார்மர் 3 விக்கெட்டுகளும், மஹாராஜ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி 288 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆடி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |