இங்கிலாந்துக்கு தரமான பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்கா! அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்
வேகப்பந்து வீச்சின் மூலம் இங்கிலாந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க வீரர் ஜென்சன்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 அரைசதம் அடித்த இங்கிலாந்தின் ஓலி போப்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி 118 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜென்சென் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
Photo: John Walton/PA via AP
இங்கிலாந்து தரப்பில் ஓலி ராபின்சன் 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்டு பிராட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஓலி போப் மட்டும் நிலைத்து நின்று ஆட, மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். அதிரடியாக ஆடிய போப் 77 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Photo: John Walton/PA via AP
தென் ஆப்பிரிக்க அணியில் ஜென்சன் மிரட்டலாக பந்துவீசி ஜோ ரூட், புரூக் ஆகியோரை வெளியேற்றினார். இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
Photo: John Walton/PA via AP
போஃக்ஸ் 11 ஓட்டங்களுடனும், ஓலி ராபின்சன் 3 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ஜென்சன் 4 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், நோர்ட்ஜெ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
Photo: John Walton/PA via AP