அட்டகாசமான சுவையில் ஜப்பான் சிக்கன்: ரெசிபி இதோ
ஜப்பான் சிக்கன் இணையம் முழுவதும் வலம் வருகிறது. இது அம்மன் மெஸ் எனப்படும் ஈரோடு உணவகத்தில் பிரபலமான உணவு.
இந்த உணவு புகழ் பெற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள பல உணவகங்கள் இதை தங்கள் மெனுவில் சேர்க்கத் தொடங்கின.
இந்த வித்யாசமான மற்றும் சுவையான ஜப்பான் சிக்கன் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன்- 1kg
- மைதா- கப்
- சோள மாவு- 1/2கப்
- மிளகு-1 டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- வெண்ணெய்- 2 டீஸ்பூன்
- பூண்டு- 3 பல்
- பச்சை மிளகாய்- 2
- கொடைமிளகாய்- 1
- பால்- 1/2 லிட்டர்
- முந்திரி- 8
- சர்க்கரை-1 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள சிக்கன், மைதா, சோள மாவு, உப்பு, மிளகு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிணைந்து வைத்துக்கொள்ளவும். 30 நிமிடம் ஊறவைக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கலந்துவைத்துள்ள சிக்கனை பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மற்றும் கொடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின்பு அதில் காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் பொடி செய்த முந்திரியை சேர்க்கவும்.
இதனைத்தொடர்ந்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து அதில் பொரித்த சிக்கன் சேர்க்கவும்.
இறுதியாக அது நன்கு வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் அதில் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான ஜப்பான் சிக்கன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |