10 நிமிடம் தாமதமானதால் 1000 கி.மீ திருப்பி அனுப்பப்பட்ட விமானம்! 335 பயணிகள் அவதி
ஜப்பானிலுள்ள ஹனடா விமான நிலையத்தில் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் விமானம் 1000 கி.மீ திருப்பி அனுப்ப பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தாமதமாக வந்த விமானம்
நேரத்தை சரியாக கடைபிடிக்கும் நாடான ஜப்பானில் நேரம் தவறாமைக்காகப் பல தண்டனைகள் வழங்கப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இந்த தடவை கொஞ்சம் விசித்திரமாக ஒன்று நடந்துள்ளது.
@Ap
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரின் ஹனடா விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு புறப்பட்ட விமானம் புகுவோகா விமான நிலையத்தை அடையத் திட்டமிட்டிருந்தது.
ஹனடா விமான நிலையத்தில் மாலை 6 மணிக்குப் புறப்பட்ட விமானம் பிரச்சனை காரணமாக ஏறத்தாழ 2 மணி நேரம் தாமதமாக 8 மணிக்குத் தான் புறப்பட்டது.
ஒலி மாசு ஊரடங்கு
புகுவோகா ரயில் நிலையத்திற்கு 10.10க்கு தரையிறங்க வந்த விமானத்தை தரையிறக்க அனுமதிக்காமல் திரும்ப அனுப்பபட்டுள்ளனர்.
புகுவோகா விமான நிலையத்தில் 10 மணி வரை தான் தரையிறங்க அனுமதி என்றும் அதற்குப் பிறகு தரையிறங்கினால் விமான நிலையத்தைச் சுற்றி வாழ்விடமாகக் கொண்டவர்களின் தூக்கம் பாதிக்கப்படும் என ஒலி மாசு ஊரடங்கு விதி இருப்பதால் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பயணிகள் குற்றச்சாட்டு
மறுநாள் 2 மணிக்கு மீண்டும் ஹனடா விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் 335 பயணிகளை விமான நிலையத்திலுள்ள தங்கும் அறையில் தங்க வைத்துள்ளது.
@Getty images
இச்சம்பவத்தால் குறிப்பிட்ட அந்த விமானச் சேவையின் மீது பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது விமர்சனத்தைத் தெரிவித்துள்ளனர். 335 பயணிகளின் அலுவல்களைக் கெடுத்ததாக இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.