மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டி - விலை என்ன தெரியுமா?

Japan Heat wave
By Karthikraja Jul 21, 2026 07:20 AM GMT
Report

ஜப்பானில் மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டி

பருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அலுவலங்களில் பணிபுரிபவர்கள் அங்குள்ள குளிர்சாதன அமைப்புகளின் மூலம், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்கின்றனர். 

மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டி - விலை என்ன தெரியுமா? | Japan Human Refrigerator Cools Body In 5 Minutes

ஆனால், தொழிற்சாலைகள் மற்றும் திறந்த வெளிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், ஜப்பானில் மனித குளிர்சாதனப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒரு இரவு தங்கினால் ரூ.52,000 வழங்கும் வீட்டு உரிமையாளர்கள் - ஜப்பானில் உள்ள விநோதம்

ஒரு இரவு தங்கினால் ரூ.52,000 வழங்கும் வீட்டு உரிமையாளர்கள் - ஜப்பானில் உள்ள விநோதம்

ஜப்பானை சேர்ந்த ட்ரஸ்கோ நகாயாமா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த சாதனத்திற்கு டோ ரெய்மோன் பெட்டி(Do Reimon Box) என பெயரிட்டுள்ளது. 

இது ஒரு நேரத்தில் ஒருவர் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சிறிய குளிரூட்டும் அறையாகும். 

மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டி - விலை என்ன தெரியுமா? | Japan Human Refrigerator Cools Body In 5 Minutes

பயனர்கள் உள்ளே நுழைந்து, அங்குள்ள நாற்காலியில் அமர்ந்து கதவை மூடினால் போதும்.

உள்ளே வெப்பநிலை சுமார் 15°C ஆகப் பராமரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 5°C வரை குளிர்விக்கப்பட்ட காற்று கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதிகளை நோக்கிச் செலுத்தப்படுகிறது.

உடல் வெப்பநிலையைச் சீராக்குவதில் உடலின் இந்தப் பகுதிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறைக்குள் 5 முதல் 10 நிமிடங்கள் செலவிடுவதன் மூலம், வெப்பத்திலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணத்தைப் பெற போதுமானது என கூறப்படுகிறது.

அதிகமாக குளிர்வடைவதை தடுக்க ஒவ்வொரு குளிர்விக்கும் அமர்விலும் 20 நிமிடங்களுக்கு பிறகு தானாகவே அணைந்து விடும்.

இது வழக்கமான குளிரூட்டப்பட்ட அறைகளை விட வேகமாக உடலை குளிர்விப்பதோடு, வழக்கமான ஏசியை விட பாதியளவே மின்சாரம் தேவைப்படுகிறது.

கட்டுமானத் தளங்கள் அல்லது திறந்த தொழிற்சாலைப் பகுதிகளில் வழக்கமான குளிர்சாதன வசதி சாத்தியமில்லாத இடங்களில் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதனை எளிதாக நகர்த்தும் வகையில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், எங்கு வேண்டுமோ அங்கு வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இருப்பினும், இது நீரேற்றம், ஓய்வு அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படாது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டி - விலை என்ன தெரியுமா? | Japan Human Refrigerator Cools Body In 5 Minutes

ஆனால், பணியிடத்தில் ஏற்படும் வெப்ப வெளிப்பாட்டை நிர்வகிப்பதற்கும், அதீத வெப்பநிலையுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பதற்கும் உதவுகிறது.

இது கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வந்த நிலையில், குன்மா மாகாணத்தில் உள்ள மேபாஷி நகர மன்றத்தில், பார்வையாளர்கள் இதை இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் சாதாரண மாடலின் விலை 1.5 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ. 9 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US