செவ்வாய் கிரகத்தின் நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்து வர உள்ள ஜப்பான்
japan launches mission to collect sample from mars moon Phobos: செவ்வாய் கிரக துணைக்கோளான போபோஸிலிருந்து மாதிரிகளை எடுத்து வர எச்3 ரிகெட் என்ற ராக்கெட்டை ஜப்பான் ஏவியுள்ளது.
போபோஸிலிருந்து மாதிரிகளை எடுத்து வர உள்ள ஜப்பான்
ஜப்பானிய விண்வெளி முகமையான (JAXA) ,செவ்வாய் நிலவுகள் ஆராய்ச்சி திட்டம் (MMX) மூலம் செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான போபோஸை (Phobos) நோக்கி எச்3 ரிகெட் ராக்கெட்டை ஏவியுள்ளது.

ஐடெஃபிக்ஸ் ரோவர் என்ற விண்கலம், 2028 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2029 ஆம் ஆண்டின் முற்பகுதியிலோ ஃபோபோஸ் நிலவில் தரையிறங்கி, அதன் மேற்பரப்பில் சுமார் 100 நாட்கள் செயல்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஃபோபோஸிலிருந்து 10 கிராம் எடையுள்ள மணல் போன்ற மாதிரிகளைச் சேகரித்து, 2031 ஆம் ஆண்டுக்குள் அவற்றை பூமிக்குத் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம், நிலவுகளின் உருவாக்கம் மற்றும் செவ்வாயின் ஆரம்பகால வரலாறு குறித்து ஆய்வு செய்வதற்கான மூலப்பொருட்களை விஞ்ஞானிகளுக்கு வழங்க வாய்ப்புள்ளது.
இந்த நிலவுகள் செவ்வாயின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்ட சிறுகோள்களா அல்லது ஒரு பெரிய பொருள் கோளைத் தாக்கியபோது வெளியேற்றப்பட்ட சிதிலங்களிலிருந்து உருவானவையா என்பது குறித்து விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.