உலகக்கோப்பையில் சாம்பியன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜப்பான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!
கத்தார் உலகக்கோப்பையில் ஆசிய அணியான ஜப்பான், சாம்பியன் அணிகளான ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
சாம்பியன்களுக்கு பயத்தை காட்டிய ஜப்பான்
கோஸ்டா ரிகா அணியிடம் குரூப் சுற்றில் தோல்வியை சந்தித்த ஜப்பான், சூப்பர் 16 சுற்றில் குரேஷிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.
ஆனால், பெனால்டி ஷூட் அவுட்டில் சோபிக்க தவறியதால் தோல்வியுற்ற ஜப்பான் உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது. எனினும், கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட ஜப்பான் இந்த முறை விளையாடிய விதம் உலகளவில் உள்ள கால்பந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
@Getty Images: Robert Cianflone
உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்
இந்த நிலையில் நாடு திரும்பிய ஜப்பான் வீரர்களுக்கு விமான நிலையில் திரண்ட மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டோக்கியோவுக்கு அருகில் உள்ள Narita விமான நிலையத்தில் கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் தங்கள் நாட்டு வீரர்களை கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
@FIFAWorldCup
உலகக்கோப்பையில் ஜப்பான் அணி நான்கு முறை சூப்பர் 16 சுற்றுடன் வெளியேறினாலும், ஆசிய சாம்பியன் பட்டத்தை 4 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
@FIFAWorldCup
@FIFAWorldCup
@FIFAWorldCup