மொத்த நெட்பிளிக்ஸ் சினிமாக்களும் ஒரே நொடியில்.. இணைய வேகத்தில் சாதனை படைத்த நாடு
இணைய பயன்பாட்டை பொறுத்தவரை, அதன் வேகம் முக்கியமான ஒன்று. 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G, 4G என அதிகரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் இணைய வேகம்
இந்நிலையில், 1.02 பெட்டாபிட்ஸ் இணைய வேகத்தை கண்டுபிடித்து ஜப்பான் பொறியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
ஜப்பானின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (NICT), சுமிடோமோ எலக்ட்ரிக் உடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
1.02 பெட்டாபிட்ஸ் என்பது ஒரு வினாடிக்கு சுமார் 1 மில்லியன் ஜிகாபிட்ஸ் ஆகும்.
இது, சராசரி அமெரிக்க இணைய இணைப்பை விட 3.5 மில்லியன் மடங்கும், இந்தியாவின் சராசரி வேகமான 63.55 Mbps ஐ விட 16 மில்லியன் மடங்கும் வேகமானது ஆகும்.
இந்த வேகத்தில், நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ள மொத்த சினிமாக்களையும் ஒரு நொடியில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்த தொழில்நுட்பம் தற்போது ஆய்வக சோதனையில் இருந்தாலும், எதிர்கால தரவு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய படிக்கல்லாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |