FIFA மகளிர் WC 2023: 5 கோல்கள் அடித்து தெறிக்கவிட்ட ஜப்பான்..கோல் கீப்பருக்கு ரெட் கார்டு
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவை வீழ்த்தியது.
ஜப்பான் அணியின் ஆதிக்கம்
FMG Stadium Waikatoயில் நடந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் மற்றும் ஜாம்பியா அணிகள் மோதின.
தொடக்கம் முதலே ஜப்பான் அணி இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. 43வது நிமிடத்தில் ஜப்பானின் ஹினடா மியாஸவா தமது அணிக்காக முதல் கோலை பதித்தார்.
AP
அதனைத் தொடர்ந்து மினா டனக்கா சறுக்கிக்கொண்டே அசத்தலாக 55வது நிமிடத்தில் கோல் அடித்தார். அடுத்த 7 நிமிடங்களில் ஹினடா மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
ஜப்பான் வீராங்கனைகளை வேகத்திற்கு ஜாம்பியாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஜுன் எண்டோ தனியாக பந்தை விரட்டிச் சென்று கோலாக மாற்றினார்.
கோல் கீப்பருக்கு ரெட் கார்டு
90 நிமிடங்கள் முடிந்த பின்னரும் ஜாம்பியா அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
கடைசி நிமிடத்தில் ஜாம்பியா கோல் கீப்பர் கேத்தரின் முஸோண்டா எதிரணி வீராங்கனையை தடுக்க முயன்றதால் அவர் கீழே விழுந்தார். இதனால் ஜப்பானுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
AP Photo/Juan Mendez
அத்துடன் கேத்தரின் முஸோண்டாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வந்த கோல் கீப்பர் எயூனிஸ் சகலாவினால் ஜப்பான் வீராங்கனை ரிகோவின் ஷாட்டை தடுக்க முடியவில்லை.
இதனால் ஜாம்பியா அணி 0-5 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி அடைந்தது.
Hagen Hopkins/FIFA/Getty Images
REUTERS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |