இந்திய தலைமை உலகிற்கு தேவை! பெங்களூருக்கு குடிபெயர்ந்த ஜப்பான் CEO வியப்பு
இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மதிப்புகள் குறித்து ஜப்பானிய CEO நவோடாகா நிஷியாமா வியப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
டெக் ஜப்பான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நவோடாகா நிஷியாமா கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் இருந்து வந்த நிலையில், இந்த அனுபவம் அவரை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.
அத்துடன் அவரது linkedin பக்கத்தில் இந்தியாவில் தனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
உலக தலைமைக்கு இந்தியா
உலகிற்கு தற்போது இந்தியாவின் தலைமை தேவை என்று நிஷியாமா வலியுறுத்தினார்..
இந்தியாவின் அனுபவம் மற்றும் மதிப்புகள் உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் என்று அவர் நம்புகிறார்.
சத்ய நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை போன்ற இந்திய வம்சாவளி தலைமை நிர்வாகிகளை அவர் எடுத்துக்காட்டுகளாக கூறினார்.
போட்டி மற்றும் ஒத்துழைப்பு இரண்டையும் மதிக்கும் இந்திய கலாச்சாரம் உலகளாவிய தலைமைக்கு ஏற்றது என்று அவர் வாதிட்டார்.
பன்முகத்தன்மையின் சக்தி
பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் மதிப்புகளைக் கொண்ட இந்தியாவின் பன்முகத்தன்மையை அவர் பாராட்டினார்.
இது ஒரு "அதிசயம்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பன்முகத்தன்மை உலகின் தற்போதைய சவால்களை சமாளிக்க உதவும் என்று அவர் நம்புகிறார்.
பயனர்களின் எதிர்வினைகள்
நிஷியாமாவின் பதிவு லிங்குடின் தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டது மற்றும் பாராட்டப்பட்டது.
பலர் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் அதன் உலகளாவிய தலைமைத்துவ திறனைப் பற்றிய அவரது கருத்துக்களை ஆதரித்தனர்.
சிலர் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றத்திற்கான வாய்ப்புகளை பற்றியும் கருத்து தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |