ஜப்பானிய பெண்களின் தோல் பராமரிப்பு; இப்படி செய்தாலே போதும்
பொதுவாகவெ ஒவ்வொரு பெண்ணிற்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அஇதிக ஆசை இருக்கும்.
அதற்காக பல முயற்சிகளை செய்து வருவார்கள். அதில் ஓர் ஆசை தான் ஜப்பானிய பெண்கள் போல் அழகாக இருக்க வேண்டும் என்பது. இதற்காக பல கிறீம்களை வாங்கி பயன்படுத்தி வருவது பழக்கம்.
ஜப்பானிய தோல் பராமரிப்பு என்பது கொரியன் தோல் பராமரிப்பு போன்றதே.
ஜப்பானியப் பெண்ணைப் பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது என்ன? மிருதுவான, ஒளிரும், கண்ணாடி போல் தோலாக தான் இருக்கும். ஜப்பானிய பெண்கள் வயதை மீறிய இளமையான தோலைக் கொண்டவர்கள்.
அவர்களின் அற்புதமான சருமத்தின் பின்னணியில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டாமா?
ஆகவே ஜப்பனீஸ் தோல் பராமரிப்புக்கான மூன்று ரகசியங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
சீரான உணவைத் தவறாமல் உட்கொள்வது
பாரம்பரிய ஜப்பானிய உணவில் வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சீரான ஊட்டசத்துகள் கிடைகிறது.
இது உடலில் இருந்து நச்சுகளை குறைக்க உதவுகிறது. தோல் நிலைகளில் இருந்து நச்சுகள் வெளியேறுவதால், ஒளிரும் சருமம் கிடைகிறது.
அரிசி தவிடு
பல ஆண்டுகளாக தோல் பராமரிப்பிற்கு அதிகமாக அரிசி தவிடை பயன்படுத்தி வருகிறார்கள். அரிசி தவிடு ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
தோல் பராமரிப்புப் பொருட்களான ஸ்க்ரப், ஃபேஷியல் மற்றும் பலவற்றில் இதைப் பயன்படுத்துவது வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது.
சருமத்தை மென்மையாகவும், இறுக்கமாகவும் பொழிவாகவும் வைத்துக்கொள்கிறது.
கிரீன் டீ
கிரீன் டீயை சீரம், எசன்ஸ், குளியல், தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு Mask போன்றவற்றில் பயன்படுத்தும் அளவுக்கு ஜப்பானிய பெண்கள் க்ரீன் டீயை விரும்புகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, க்ரீன் டீயில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தோல் பராமரிப்புக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |