நிலவை நோக்கி ஜப்பானின் பயணம்... ஸ்லிம் விண்கலம் வெற்றி பெறுமா?
ஜப்பான் நிலவை ஆய்வு செய்வதற்காக ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தியுள்ளது.
ஸ்லிம் விண்கலம்
மோசமான வானிலை காரணமாக கடந்த வாரம் ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் விண்ணில் ஏவவில்லை. 3 முறை ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று இந்திய நேரப்படி காலை 4.40 மணியளவில் ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
நிலவில் பாறைகளை ஆய்வு செய்வது மற்றும் விண்கலத்தை துல்லியமாக தரையிறங்கும் நடைமுறைகளை காண்பிப்பதற்காக, 200 கிலோ எடை கொண்ட விண்கலத்தில் பிளாஸ்டிக் சோலார் பேனல், மிக நுண்ணிய கேமராக்கள், நேனோ டெக்னாலஜியால் சுருக்கப்பட்ட மின்னணு பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த செயள்முறையானது வெற்றிப்பெற்றால் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய உலகின் ஐந்தாவது நாடாக ஜப்பான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |