கோலிக்கு பதில் இந்தியாவுக்காக மீண்டும் களமிறங்கிய ஜார்வோ... கடுப்பான பேர்ஸ்டோ செய்த செயல்! வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து-இந்தியா இடையேயான 3வது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது கோலிக்கு பதில் இந்திய ஜெர்சி அணிந்த பிரிட்டிஷ் ரசிகர் ஒருவர் பேட்டுடன் களமிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
1-0 என இந்திய முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று ஆகஸ்ட் 25ம் தேதி HEADINGLEY மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 432 ஓட்டங்கள் குவித்தது.
357 ரன்கள் பின்தங்கிய நிலைியல் 3வது நாள் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்நதது, கே.எல்.ராகுல் 8 ஓட்டங்கள் வெளியேறினார்.
இதன் பின் ஜோடி சேர்ந்த ரோகித்-புஜாரா நிதானமாக வினையாடி ரன்களை சேர்த்தனர். எனினும், 59 ஓட்டங்களில் ரோகித் அவுட்டானார், இந்தியா அணி 116 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது.
இந்நிலையில், ரோகித் அவுட்டானதை தொடர்ந்து களத்திற்கு கோலி வருவதற்குள் ஹெல்மட், பேட், கையுறை மற்றும் 69 இந்திய ஜெர்சி அணிந்து ஜார்வோ களமிறங்கிவட்டார்.
உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் களத்திற்குள் நுழைந்து ஜார்வோவை வெளியேற்றினர்.
இடையூறு செய்யும் வகையில் களத்திற்குள் ஜார்வோ நுழைந்ததால் கடுப்பான இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ, மைதானத்தில் விழுந்த கிடந்த ஜார்வோ அணிந்த வந்த கையுறை எட்டி உதைத்தார்.
ஜார்வோ என்ற ஜெர்சி அணிந்த மைதானத்திற்குள் நுழைந்தவர் Daniel Jarvis என்ற பிரித்தானியா பிராங்க் ஸ்டார் ஆவார்.
அவர் 2வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய ஜெர்சி அணிந்து பீல்டிங் செய்ய மைதானத்திற்கு நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Daniel Jarvis விளையாட்டு நிகழ்வுகளில் இதுபோன்று எல்லைமீறி நுழைந்து பிராங்க் செய்து அதை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.