பும்ராவிற்கு நன்றி சொன்ன இங்கிலாந்து ரசிகர்! வெறுப்பின் உச்சத்தில் வெளியிட்ட புகைப்படம்
இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோவ்வை அவுட் ஆக்கியதற்காக, அந்நாட்டின் பிரபல ரசிகர் நன்றி தெரிவித்துள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. இதன் பின் இந்திய அணி வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடர் மூலம் மிகவும் பிரபலமான இங்கிலாந்து ரசிகர் Jarvo பும்ராவிற்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், நான் பும்ராவிற்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், அவர் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் ஜானி பேர்ஸ்டோவ்வை டக் அவுட் ஆக்கி வெளியேற்றியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Jarvo இந்த டெஸ்ட் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர். போட்டியின் போது அவ்வப்போது இடையில் ஓடி வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.
அப்படி ஒரு முறை மைதானத்திற்குள் ஓடி வந்த போது, ஜானி பேர்ஸ்டோவ் அவரை கடுமையாக திட்டினார்.
அதுமட்டுமின்றி Jarvo தொடர்ந்து இப்படி மைதானத்திற்குள் ஓடி வந்து கொண்டே இருந்ததால்,
இது ரசிகர்களுக்கே வெறுத்துப் போக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர் மீது புகார் கொடுத்தது.
இதையடுத்து, அவரை பொலிசார் கைது செய்து, அதன் பின் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.