6 பந்துகளில் 6 சிக்சர்! சர்வதேச ஒருநாள் போட்டியில் வெளுத்து வாங்கிய இந்தியாவை சேர்ந்த பிரபல வீரர்... வைரலாகும் வீடியோ
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பிரபல வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஓமனில் நேற்று நடந்த பப்புவா நியூ கயானாவுக்கு எதிரான 2-வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய அமெரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.
அந்த அணி வீரர் ஜஸ்கரன் மல்கோத்ரா 124 பந்துகளில் 4 பவுண்டரி, 16 சிக்சருடன் 173 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
அவர் கடைசி ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் காடி டோகா பந்து வீச்சில் 6 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 2-வது வீரர், ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சிக்சர் மன்னனாக புகழ்பெற்றுள்ள ஜஸ்கரன் மல்கோத்ரா இந்தியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
6️⃣ x 6️⃣ from the legendary USA cricketer, Jaskaran Malhotra! 🔥🏏 pic.twitter.com/JsuqzoHv7B
— Willow TV (@willowtv) September 9, 2021