பெண்கள் தலையில் சூடி கொள்ளும் மல்லிகைப்பூவில் இத்தனை மருத்துவப்பயன்கள் ஒளிந்துள்ளதா?
மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். மல்லிகை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்.
தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம்.
இதன் பூக்கள் நறுமணமுடையவை. இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.
இதில் நோய் தீர்க்கும் பல அற்புத மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது. அந்தவகையில் மல்லிகைப்பூவில் ஒளிந்துள்ள மருத்துவநன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.
- மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்கும்.
- மல்லிகை மொட்டுக்களை புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமடையும்.
- மல்லிகையின் வேரை காயவைத்து பொடிசெய்து அதனுடன் வசம்புத் தூளை சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும்.
-
கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
- பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு. மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.
- உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.
- மல்லிகை பூவை நிழலில் காயவைத்து பின்பு நன்கு பொடியாக அரைத்து வைத்து கொண்டு தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்துவிடும்.
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் மல்லிகை பூவை ஓரிரண்டு உண்டு வர நோயெதிர்ப்பு சக்தி உயரும்.
-
தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகை பூவிற்கு உண்டு. எனவே சில மல்லிகை பூவை எடுத்து கையில் கசக்கி, அவற்றை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.
-
மல்லிகை பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படும். இந்த எண்ணெய் உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
-
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், தினமும் மல்லிகை பூவை தலையில் சூடி கொண்டால் போதும் மன அழுத்தம் குறையும், உடல் சூடு தணியும்.
-
வயிற்று புண் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வாய் புண் இருக்கும், இந்த பிரச்சனையை சரி செய்ய மல்லிகை பூவை சிறிதளவு தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி தினமும் காலை, மாலை என இரு வேளை குடித்து வர, வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும்.