புறப்படும் முன் திடீரென ராஜினாமா செய்த தலைமை பயிற்சியாளர்! மீண்டும் சிக்கலில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை கில்லெஸ்பி ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
நேற்றைய தினம் டெஸ்ட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு கிளம்பியது. புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் தனது உதவி பயிற்சியாளர் டிம் நீல்சனின் ஒப்பந்தத்தை, பாகிஸ்தான் வாரியம் புதுப்பிக்க மறுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து டெஸ்ட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆகிப் ஜாவித் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கருத்து வேறுபாடு காரணமாக ஏற்கனவே கேரி கிறிஸ்டன் தனது பயிற்சியாளர் பதவி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |