பார்டர்-கவாஸ்கர் டிராபி: அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி நிச்சயம்! கில்லெஸ்பி நம்பிக்கை
வங்கதேச தொடரை முடித்துக்கொண்டு அவுஸ்திரேலியா செல்ல தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் பலர், தங்களது அணி இந்தியாவை வீழ்த்தும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் ஆஸி கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய அணியை எதிர்கொள்ள தனது அனுபவங்களை பகிர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஜேசன் கில்லெஸ்பி கருத்து
ரிக்கி பாண்டிங்-கை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜேசன் கில்லெஸ்பி-யும் இந்தியா-அவுஸ்திரேலியா போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த முறை அவுஸ்திரேலியா வெற்றி பெறும் என நம்புகிறேன்.
குறிப்பாக, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லியான் போன்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்" என கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.
மேலும், "ஸ்டீவ் ஸ்மித் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். அவர் இந்த இடத்தில் தான் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்" என்றும் கில்லெஸ்பி கூறியுள்ளார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர், பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.
இந்தியா-அவுஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நவம்பர் 22ஆம் திகதி தொடங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |