டெஸ்ட்டில் அதிகரித்து வரும் ஆக்ரோஷம்! பாகிஸ்தான் வீரரை கடுப்பேற்றிய ஜேசன் ஹோல்டர்: வெளியான வீடியோ
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவு அணி வீரர் ஜேசன் ஹோல்டர், ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த 20-ஆம் திகதி துவங்கியது. இதில் முதலில் ஆடி வரும் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாளான இன்று சற்று முன் வரை 4 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 75 ஓட்டங்களும், பாபத் அலம் 76 ஓட்டங்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து களத்தில் மொகமத் ரிஷ்வான்(22), பகீம் அஷ்கர்ப்(23) ஆடி வருகின்றனர்.
இந்நிலையில், இப்போட்டியில், பாகிஸ்தானின் முதல் மூன்று விக்கெட்டுகளான ஆபித் அலி (1), இம்ரான் பட் (1), அசார் அலி (0) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேறியதால், மேற்கிந்திய தீவு அணி ஆதிக்கம் செலுத்தியது.
Jason Holder keeping things positive and chirpy on a hot, sweltering day! #WIvPAK #MenInMaroon pic.twitter.com/vImeg69X8y
— Windies Cricket (@windiescricket) August 20, 2021
ஆனால், கேப்டன் பாபர் அசாம் மற்றும் பாபத் ஆலம் ஜோடி அதன் பின், விக்கெட் விழ விடாமல் 158 ஓட்டங்கள் குவித்து பிரிந்தது. அதைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் களத்தில் இறங்கிய போது, மேற்கிந்திய தீவு அணி வீரரான ஜேசன் ஹோல்டர் மறுமுனையில் இருந்து பந்துவீசிக் கொண்டிருந்த கைல் மேயர்ஸை கடைசி போட்டியில் ரிஸ்வான் வெளியேற்றியதை நினைவூட்டினார்.
முதல் டெஸ்டில், ஹோல்டர் பந்தை முழுவதுமாக வெளியே எடுத்து ஒரு ஷாட் விளையாட பார்த்தார், ஆனால் ரிஷ்வான் அந்த பந்தில் அவுட் ஆகினார். அதையே மீண்டும் போடும் படி ஜேசன் ஹோல்டர் ஞாபகப்படுத்தி, ஸ்ட்லெஜிங்கில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
டெஸ்ட் போட்டிகள் பொறுத்தவரை இப்போது ஸ்லெட்ஜிங் என்பது தொடர்ந்து வருகிறது. இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளிலும் இரு நாட்டு வீரர்களும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.