வங்கதேச அணியை துவம்சம் செய்த வீரர்! 12வது சதம் விளாசி மிரட்டல்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய், வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அபார சதம் விளாசினார்.
சரிந்த தொடக்க விக்கெட்டுகள்
இங்கிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேசம் பந்துவீச்சை தெரிவு செய்ததால், இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.
@Getty Images
தொடக்க வீரர் பிலிப் சால்ட் 7 ஓட்டங்களிலும், மாலன் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஜேம்ஸ் வின்ஸ் 5 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதிரடி சதமடித்த ஜேசன் ராய்
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடினார். பவுண்டரிகளை தொடர்ந்து விரட்டிய அவர் அதிரடியாக சதம் விளாசினார்.
@Gareth Copley/Getty Images
இது அவரது 12வது ஒருநாள் சதம் ஆகும். தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராய், 124 பந்துகளில் ஒரு சிக்ஸர், 18 பவுண்டரிகளுடன் 132 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி தற்போது வரை 44 ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு 262 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
A magnificent ? from the England opener! #BANvENG | ?: https://t.co/NuMyCOBOyO pic.twitter.com/NLTheJJO8n
— ICC (@ICC) March 3, 2023