2022 ஐபிஎல் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்! குஜராத் அணிக்கு பெரிய இழப்பு
2022 ஐபிஎல் தொடரிலிருந்து இலங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜேசன் ராய் விலகியுள்ளார்.
2022 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 22ம் திகதி தொடங்கயிருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் களமிறங்கும் நிலையில், மொத்தம் 10 அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2022 தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில், 2022 ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஜேசன் ராய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜேசன் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவருக்கும் வணக்கம், குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அணிக்கு.
மிகவும் கனத்த இதயத்துடன் 2022 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற நான் முடிவு செய்துள்ளேன்.
என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஏலத்தில் எடுத்து அணி நிர்வாகத்திற்கும் கேப்டன் பாண்டியாவுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 3 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடி வருவது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, குடும்பத்துடன் நேரம் செலவிட நான் விரும்புகிறேன்.
டைட்டன்ஸ் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் பார்ப்பேன் மற்றும் அவர்கள் தனது முதல் தொடரில் கோப்பையை கைப்பற்ற ஆதரிப்பேன்.
எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி மற்றும் அனைவரும் எனது முடிவை மதிப்பளித்து பாராட்டுவீர்கள் என நம்புகிறேன் என ராய் தெரிவித்துள்ளார்.
IPL 2022. pic.twitter.com/fZ0LofBgSE
— Jason Roy (@JasonRoy20) March 1, 2022