ஜேசன் சஞ்சய் இயக்கிய படத்தை பார்க்க வந்த தாய் சங்கீதா, தங்கை திவ்யா.., வைரல் வீடியோ
Jason sanjay mother sister came to see the movie sigma- ஜேசன் சஞ்சய் இயக்கிய "சிக்மா" படத்தை பார்க்க வந்த தாய் சங்கீதா, தங்கை திவ்யாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் "சிக்மா" திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள சிக்மா படத்தை தமன் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள "சிக்மா" படத்தை பார்க்க அவரது தாய் சங்கீதா மற்றும் தங்கை திவ்யா ஷாஷா ஆகியோர் சென்னை கமலா திரையரங்குக்கு வந்தனர்.
அவர்கள் திரையரங்குக்கு வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sangeetha came to watch her son’s movie ❤️#sigma #jasonsanjay pic.twitter.com/IQewkHB5Uj
— balamurugan (@chefbalaa) October 2, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |