முதல் ஓவரிலே இங்கிலாந்தின் விக்கெட்டை தட்டி தூக்கிய பும்ரா! ரிவ்யூ கேட்டு வெளியேறிய வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முதல் ஓவரிலே விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் ஆடி வரும் இங்கிலாந்து அணி, சற்று முன் வரை முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. இந்நிலையில், இப்போட்டியின் முதல் ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசினார்.
India start the Test series with a bang.
— England Cricket (@englandcricket) August 4, 2021
Live Scorecard & Videos: https://t.co/5eQO5BWXUp#ENGvIND pic.twitter.com/dqKg5gHnoh
இதில், 5வது பந்தில் துவக்க வீரரான ரோரி பர்ன்ஸ்ஸை, பும்ரா தன்னுடைய அற்புதமான பந்து வீச்சின் மூலம் எல்.பி. டபில்யூ ஆக்கினார்.
ஆனால், ரோரி பர்ன்ஸ் ரிவ்யூ கேட்க, அது இந்தியாவிற்கு சாதகமாக போனதால், ரோரி பர்ன்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.