டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பும்ரா!
ஐதராபாத் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய பும்ரா விக்கெட் எடுக்காமல் 50 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்
பும்ரா டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்ததும் இந்தப் போட்டியில் தான்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
ஐதராபாத்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் அக்சர் பட்டேல், சஹால் சிறப்பாக பந்துவீசினர். அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், சஹால் 22 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரரான ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அத்துடன் அவர் 50 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.
அவரது டி20 கேரியரில் இதுதான் மோசமான பந்துவீச்சாகும். கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பும்ரா 47 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார். மேலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பும்ராவின் ஓவரில் நான்கு சிக்ஸர்கள் விளாசப்பட்டன.