ஆண்கள் மாமனாரை கவனித்துக்கெண்டால் செல்வம், ஆரோக்கியம் வரும் - ஜோதிடர் அனில் சித்தார்த்
ஆண்கள் மாமனாரை கவனித்துக்கெண்டால் செல்வம், ஆரோக்கியம் வரும் என்று ஜோதிடர் அனில் சித்தார்த் நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
ஆண்கள் மாமனாரை கவனித்துக்கொள்ள வேண்டும்
சோதனைகள் தான் சாதனையாக முடியும்.சோதனைகளுக்காக பின்வாங்கிட முடியாது. சில அசௌகரியங்கள், சில சிரமங்கள் வரலாம். அதையும் தாண்டி ஜெயிக்கிறதில்தான் உள்ளது.
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் இந்த மூன்று பேரையும் ஆக்டிவ் செய்து விட்டாலே பல பிரச்சினைகளை நீங்கள் சரிசெய்துவிட முடியும். ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பெண் புகுந்த வீட்டை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். நிறைய ஜாதகத்தில் மருமகன் மாமியார், மாமனாரை கவனிக்கிறதே இல்லை.
மாமியார், மாமனார் நன்றாக பார்த்துக்கொள்ளும் மருமகன் தோற்றதாக சரித்திரமே இல்லை. வரதட்சனை வாங்கிறதே மிகப்பெரிய தவறு. பெண் வீட்டில் இஷ்டப்படி கொடுத்தால் வாங்கிக்கொள்ள வேண்டும். மற்றபடி எதையும் எதிர்பார்க்கக்கூடாது.
ஆண் மகன் அன்பையும், பாசத்தையும் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். மருமகன் பெண் வீட்டை கவனிக்கொண்டாலே பெயர் வரும், புகழ் வரும், பணம் வரும் எல்லாமே வந்துவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |