ஒரு கப் ஜவ்வரிசி போதும்.., மொறு மொறு தோசை செய்யலாம்
Javvarisi Dosa Recipe- தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
அந்தவகையில், மாவு அரைக்காமல் ஜவ்வரிசி வைத்து தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஜவ்வரிசி- ½ கப்
- தயிர்- 1 கப்
- ரவை- ¼ கப்
- அரிசி மாவு- ¼ கப்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சை மிளகாய்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- உப்பு- 1 ஸ்பூன்
- தண்ணீர் - 1 கப்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஜவ்வரிசியை நன்கு கழுவி அதில் தயிர் சேர்த்து கலந்து 8 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, அரிசி மாவு, ரவை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஊறவைத்த ஜவ்வரிசியில் அரைத்த கலவையை சேர்த்து தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் அதில் மாவு சேர்த்து எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சுவையான ஜவ்வரிசி தோசை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |