ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-க்கு போட்டியாக Jawa 42 FJ அறிமுகம்
இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான Jawa Yezdi Motorcycle இந்தியாவில் அதன் மிகவும் பிரபலமான Jawa 42 பைக்கின் ஸ்போர்ட்டி பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய மொடல் Jawa 42 FJ என அழைக்கப்படுகிறது. இந்த பைக் basic ஜாவா 42-ஐ விட ரூ.26,000 அதிகமாக உள்ளது.
Jawa 42 FJ பைக்கின் விலை ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரை உள்ளது.
இந்திய சந்தையில், இது புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) உடன் போட்டியிடும், இதன் விலை ரூ .1.99-2.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
Jawa 42 FJ பைக்கின் வடிவமைப்பைப் பற்றி பேசுகையில், naked look-ல் side or split grab rails, twin angular exhaust pipes மற்றும் twin rear suspension-உடன் வரும்.
இதில் ஜாவா ஸ்டிக்கர்கள் மற்றும் அலாய் வீல்களால் அலங்கரிக்கப்பட்ட நேர்த்தியான sleek teardrop-shaped fuel tank இருக்கும். foot pegs அமைப்பு சவாரியை மிகவும் ஸ்போர்ட்டியாக உணரவைக்கும் என்பதைக் காட்டுகிறது.
Jawa 42 FJ features
Jawa 42 FJ புதிய frame அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். சௌகரியமாக வாகனம் ஓட்டுவதற்கு, முன்புறத்தில் twin forks மற்றும் பின்புறத்தில் adjustable shock absorbers வழங்கப்படலாம்.
இந்த பைக்கில் spoke மற்றும் alloy wheel ஆப்ஷன்கள் இருக்கும். இரண்டு சக்கரங்களிலும் dual-channel ABS பிரேக்கிங் சிஸ்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய Jawa 42 FJ-வில் LED lighting, including digital instrument console, indicators உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய பதிப்பு தற்போதைய மாடலை விட அதிக சக்தி வாய்ந்தது. இந்த பைக்கில் 334cc single-cylinder, DOHC 4V liquid-cooled engine பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 30 bhp பவரையும், 32.7Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Jawa 42 FJ, Jawa Yezdi Motorcycle, Royal Enfield Classic 350