மகளிர் உலகக் கோப்பை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட BCCI ஜெய் ஷா
2024 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து BCCI செயலாளர் ஜெய் ஷா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முக்கிய அறிவிப்பு
2024 அக்டோபர் 3 ஆம் திகதி வங்கதேசத்தில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு, அட்டவணைகள் வெளியிடப்பட்டன.
ஆனால் உள்நாட்டு அமைதியின்மை அதிகரித்து வருவதால் வங்கதேசத்தில் நடத்து சாத்தியமில்லாமல் போகலாம் என தகவல் இணையத்தில் அதிகமாக பரவியது.
இந்நிலையில் BCCI செயலாளர் ஜெய் ஷா ஊகங்களுக்கு பதிலளித்து, இடம் மாற்றம் அவசியமானால், மாற்று ஹோஸ்டாக இந்தியா வராது என்பதை உறுதிப்படுத்தினார்.
போட்டியை நடத்துவதற்கு BCCI, ICC ஐ அணுகியதாக ஜெய் ஷா தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், இந்தியாவில் நடைபெற்று வரும் பருவமழை மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை அந்நாட்டில் நடத்துவதைக் காரணம் காட்டி அவர் நிராகரித்துள்ளார்.
பங்களாதேஷின் நிலைமையை ஐசிசி தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் போட்டி நடைபெறும் இடம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறாது என BCCI செயலாளர் ஜெய் ஷா தற்போது உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
? JUST IN: ?
— Female Cricket (@imfemalecricket) August 15, 2024
Jay Shah confirms that India will not host the 2024 women's T20 World Cup.
Sri Lanka and UAE are front runners at the moment. #CricketTwitter pic.twitter.com/NgL9UxmzH2
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |