சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் ப்ரொபோஸ் பண்ண அந்த பெண் யார் தெரியுமா? சுவாரசிய தகவல்
வியாழக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் ஐபிஎல் டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி தொலைவியை தழுவியது.
அனால் இந்த போட்டிக்கு இடையில், சிஎஸ்கே அணியின் வீரர் தீபக் சாகர் தனது காதலி ஜெயா பரத்வாஜுக்கு முன்னால் மண்டியிட்டு மோதிரத்தை நீட்டி தனது காதலை வெளிப்படுத்தினார்.
சிஎஸ்கே கேப்டன் தோனியின் மனைவி, மகள் உட்பட சக வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற நண்பர்களுக்கு மத்தியில் இந்த ஜோடி மைதானத்தில் மோதிரங்களை மாற்றிக்கொண்டது. இந்த நெகிழ்ச்சியூட்டும் தருணத்தின் வீடியோ மற்றும் தம்பதியின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவியது.
இந்நிலையில்,இந்த சம்பவம் தம்பதியினருக்கு எல்லா மூலைகளிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அனைவரின் பேச்சாக மாறியுள்ளது.
And I Said YES !!! @deepak_chahar9 ❤️ pic.twitter.com/cVb7zyuhdp
— Jaya Bhardwaj (@JayaBhardwajOff) October 7, 2021
யார் இந்த ஜெயா பரத்வாஜ்?
தீபக்கும் ஜெயாவும் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வருவதாகவும் ஆனால் அவர்களின் உறவை வெளிஉலகிற்கு மறைத்து வைத்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் மற்ற வீரர்களின் மனைவிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சிஎஸ்கே போட்டிகளில் ஜெயா அடிக்கடி ஸ்டாண்டுகளில் காணப்பட்டார்.
இதற்கிடையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீபக் ஜெயாவுடன் உறவில் இருப்பதாக வதந்திகள் வெளிவந்தன. இருப்பினும், இந்த ஜோடி ஒருபோதும் பொதுவில் ஒன்றாக தோன்றவில்லை.
தீபக்கின் வருங்கால மனைவி ஜெயா, முன்னாள் ஹிந்தி பிக் பாஸ்-5 போட்டியாளரும் நடிகருமான சித்தார்த் பரத்வாஜின் சகோதரி ஆவார்.
ஜெயா மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மற்றும் தற்போது ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் டெல்லியைச் சேர்ந்தவர்.
தகவல்களின்படி, தீபக் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயாவை தனது இந்திய அணியினருக்கும் சிஎஸ்கே அணியினருக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
தற்போது அதிகாரப்பூர்வமாக தனது காதலை வெளிப்படுத்தியபிறகு அவர் விரைவில் ஜெயாவுடன் திருமணம் செய்யவுள்ளார்.