ஜெயலலிதாவின் தங்க நகைகள் - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூர் CBI சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 1996 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
அதன்போது போயஸ் கார்டன் ஜெயலலிதா வீட்டில் நடத்திய சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள், கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கானது பெங்களூரில் நடைபெற்றதால் பிறமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்து அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தது.
பின் 2016 ஆம் ஆண்டில் ஜெயலலிதா மறைந்தவுடன், பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இதை விசாரணை நடத்திய நீதிபதி மோகன், இந்த வழக்கின் செலவு தொகை ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், அதை வங்கி வரைவோலையாக (டி.டி.) வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடாக அரசிடம் இருக்கும் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த விசாரணை வருகிற பிப்ரவரி மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் மனுதாக்கல் செய்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி மீண்டு மனுதாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை இங்கு நடைபெற்று கொண்டிருக்கும்போது, இங்கு தான் அந்த பொருட்களை ஏலம் விட வேண்டும். ஆனால் தமிழகத்தில் நடப்பதில் உடன்பாடில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |