விவாகரத்து குறித்து எனக்கு ஏதும் தெரியாது- மிகுந்த கவலையுடன் அறிக்கை வெளியிட்ட ஜெயம் ரவி மனைவி
நடிகர் ஜெயம் ரவி தனது விவாகரத்து குறித்து அறிக்கை வெளியிட்டதையடுத்து, அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமந்தா - நாக சைதன்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி, ஹர்திக் பாண்டியா - நடாஷா என பல பிரபலங்கள் சமீபத்தில் விவாகர்த்து பெற்று வருகின்றனர்.
அந்தவரிசையில் தற்போது ஜெயம் ரவியும் அவருடைய மனைவி ஆர்த்தியும் இணைந்துள்ளனர். இதுவரையில் விவாகரத்து குறித்து சமூக ஊடகங்களில் அறிக்கை வெளியிட்ட பிரபலங்கள் அனைவருமே ஒன்றாக இணைந்து தான் வெளிப்படுத்துவார்கள்.
ஆனால் ஜெயம் ரவி விவாகர்த்து தொடர்பில் அவருடைய மனைவி ஆர்த்தி எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமலேயே இருந்தார்.
Grateful for your love and understanding.
— Jayam Ravi (@actor_jayamravi) September 9, 2024
Jayam Ravi pic.twitter.com/FNRGf6OOo8
இந்நிலையில் விவாகரத்து குறித்த அறிக்கையை ஆர்த்தி வெளியிட்டுள்ளார்.
மிகுந்த கவலையுடன் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி
ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பை பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறேன். இது குறித்து எனக்கு தெரியப்படுத்தவில்லை. ஜெயம் ரவி மட்டுமே தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்து வெளியிட்டுள்ளார். இது எனக்கும் என் குழந்தைகளுக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து ஜெயம் ரவியிடம் பேச முயற்சித்த போது, அவர் அதற்கு அனுமதியே வழங்காமல் இருந்தார் என ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களில் என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் தவறான தகவல்கள் பரவி வருகிறது. என்ன நடந்தது என உங்களுக்கு தெரிவிக்கும் விதமாகவே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |