நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்தா? தீயாய் பரவும் தகவல்
ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டு விவாகரத்துக்கு பெறவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி
தமிழ் திரையுலகில் ‘சாக்லேட் பாய்’ என வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் ‘ஜெயம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார்.
சிறந்த நடிகராக இருந்தாலும் இவருடைய நடிப்பில் வெளியாகிய ஒரு சில படங்கள் தோல்வியை மட்டுமே சந்தித்தன.
தனி ஒருவன் படத்திற்கு பிறகு இவர் எந்த படமும் சரியாக அமையவில்லை. ஆனாலும் மக்கள் இடத்தில் அவருடைய வரவேற்பு குறையவில்லை.

பின் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அருள்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தில் நடித்து நல்ல ஓர் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் அவர் தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
விவாகரத்து பெற்றாரா ஜெயம் ரவி?
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவியின் திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டதாக செய்திகள் பரவி வருகின்றன.
இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் குடும்பமாக இருக்கும் படங்களை அடிக்கடி பகிர்ந்து வருவது வழக்கம்.

ஆனால் தற்போது ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
திரையுலக ஜோடிகள் விவாகரத்து பெற்று வருவது வழக்கமாகியுள்ளது. சமந்தா-நாக சைதன்யா முதல், தனுஷ்-ஐஸ்வர்யா வரை பலர் இப்படித்தான் செய்தனர்.
அதுப் போலவே தற்போது இவர்களும் விவாகர்த்து பெறவுள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ஆனால் இது குறித்து எந்தவொரு தகவலும் அவர்கள் சார்பில் வெளிவரவில்லை.
மேலும் ஆர்த்தி தனது சமூக ஊடகத்தில் இருந்து ரவி என்ற பெயரை மாற்றவில்லை என ரசிகர்கள் பெருமிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        