முரளிதரனுக்கு மிகப்பெரிய நன்றி: நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ஜாம்பவான் சனத் ஜெயசூரியா
இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூரியா தனது பதிவில் முத்தையா முரளிதரனுடனான சந்திப்பு குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா, தற்போது தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்த பின்னர் ஜெயசூரியா தமது அணியை அழைத்து பேசினார்.
இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதும் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனை சந்தித்துள்ளார் சனத் ஜெயசூரியா.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "எங்கள் உதவி ஊழியர்கள் மற்றும் வீரர்களை சந்திக்க வந்தமைக்காக முரளிக்கு (முரளிதரன்) மிகப்பெரிய நன்றி! மிகவும் பாராட்டுகிறேன்!" என தெரிவித்துள்ளார்.
A big thank you to Murali for coming and speaking to our support staff and players! Much appreciated! pic.twitter.com/SjrFLyfrJ0
— Sanath Jayasuriya (@Sanath07) August 1, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |