அந்த பசி இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறேன்: இங்கிலாந்து தொடர் குறித்து இலங்கை ஜாம்பவான் கருத்து
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை எதிர்கொள்வது குறித்து இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூரியா கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி
2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாட உள்ளது.
இதற்காக இங்கிலாந்துக்கு 8 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் நாளை ஓல்டு டிராஃபோர்டில் தொடங்குகிறது.
இந்த தொடர் குறித்து இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜெயசூரியா (Sanath Jayasuriya) கருத்து தெரிவித்துள்ளார்.
சனத் ஜெயசூரியா
அவர் கூறுகையில், "இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான அரிதான வாய்ப்புக்கான பசியுடன் இருக்க வேண்டும். நான் அந்த பசி இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறேன். அதன் சிறந்த வாய்ப்பை வீரர்கள் அறிந்திருப்பதை உறுதி செய்துள்ளேன்.
இதுபோன்ற 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது மீண்டும் எளிதாக கிடைக்கும் வாய்ப்பு அல்ல. எனவே எங்களால் முடிந்தவரை அதை எடுக்க வேண்டும். இங்கு ஓட்டங்களை எடுப்பது சவாலானது.
ஏனெனில், ஆடுகளங்கள் Flat ஆக இருந்தாலும் பந்து ஸ்விங் அல்லது சீமிங்கை தொடங்கும். அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |