சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான இலங்கை வீரர்: உற்சாகமாக வரவேற்ற சனத் ஜெயசூரியா
இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான நிஷன் மதுஷ்காவை சக அணி வீரர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
நிஷன் மதுஷ்கா
மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
இப்போட்டியில் 25 வயதான நிஷன் மதுஷ்கா (Nishan Madushka) இலங்கை அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார்.
பயிற்சியாளர் சனத் ஜெயசூரியா (Sanath Jayasuriya) அவருக்கு தொப்பி அளித்து அவரை அணிக்கு வரவேற்றார். அத்துடன் சக அணி வீரர்களும் மதுஷ்காவிற்கு ஆதரவு அளித்தனர்.
A new chapter begins! Best of luck, Nishan Madushka! ?#SriLankaCricket #NishanMadushka #ODI #Debut pic.twitter.com/rrWC2JAku3
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 20, 2024
புதிய அத்தியாயம்
இதுகுறித்த வீடியோவை பகிர்ந்த இலங்கை கிரிக்கெட், "ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. வாழ்த்துக்கள் நிஷன் மதுஷ்கா!" என குறிப்பிட்டுள்ளது.
நிஷன் மதுஷ்கா 38 டி20 போட்டிகளில் 5 அரைசதங்களுடன் 842 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதேபோல் 6 டெஸ்ட் போட்டிகளில் 444 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதமும் (205) அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |