ஆசியப் போட்டியில் வெள்ளி வென்ற இலங்கை பெண்சிங்கங்கள்! இந்தியாவுக்கும் வாழ்த்து..ஜெயசூரியா நெகிழ்ச்சி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு, ஜாம்பவான் சனத் ஜெயசூரியா வாழ்த்து கூறியுள்ளார்.
வெள்ளிப்பதக்கம்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. தோல்வியுற்ற இலங்கை அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
AFP/Getty Images
ஜாம்பவான் சனத் ஜெயசூரியா வாழ்த்து
இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மகளிர் அணிக்கு வாழ்த்து கூறி பதிவிட்டது. அதில், 'இது நாங்கள் விரும்பிய முடிவு அல்ல என்றாலும், ஆசியப் போட்டியில் வென்று தாயகத்திற்கு வெள்ளிப்பதக்கத்தை கொண்டு வந்துள்ளோம்! தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு எங்கள் வாழ்த்துக்கள்' என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆசியப் போட்டியில் வெள்ளி வென்ற இலங்கை மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Congratulations to the Sri Lankan women’s team for winning a silver at the Asian games. https://t.co/nrk0robKL3
— Sanath Jayasuriya (@Sanath07) September 25, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |