இலங்கையின் மிரட்டலான வெற்றி..ஜாம்பவான் கூறிய வார்த்தைகள்
இதே வேகத்தை அப்படியே வைத்திருங்கள் என இலங்கை வீரர்களுக்கு மஹேல ஜெயவர்த்தனே அறிவுரை
இலங்கை அணியின் இளம் வீரர் மதுஷன்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி வெற்றி பெற்றதற்கு ஜாம்பவான் வீரர் மஹேல ஜெயவர்த்தனே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 176 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
PC: AFP
குசால் மெண்டீஸ் 19 பந்துகளில் 36 ஓட்டங்களும், குணதிலகா 20 பந்துகளில் 33 ஓட்டங்களும், பனுக ராஜபக்சே 14 பந்துகளில் 31 ஓட்டங்களும் விளாசினர். இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜெயவர்த்தனே, வெற்றி பெற்ற இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், 'சிறப்பாக முடித்தீர்கள் வீரர்களே!!! அருமையான சேசிங். இந்த வேகத்தை அப்படியே வைத்திருங்கள் மற்றும் இதே அணுகுமுறையை நேசியுங்கள்' என தெரிவித்துள்ளார்.
Well done boys!!! Great chase. Keep the momentum and love the attitude ????
— Mahela Jayawardena (@MahelaJay) September 3, 2022
PC: AFP