விராட் கோலி விலகல் குறித்து மனம் திறந்து பேசிய ஜெய்ஷா.., அவர் கூறியது என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விலகியது குறித்து ஜெய்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி விலகல்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2 -வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனால், இரு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது. இந்த முதல் 2 போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகியிருந்தார்.
இந்நிலையில், 3 -வது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட்டில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியிலும் விராட் கோலி விளையாடவில்லை.
ஜெய்ஷா பேசியது
இந்த விவகாரத்தில் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, "15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விடுமுறை கேட்கிறார் என்றால், அது அவருடைய உரிமை.
அதுவும், விராட் கோலி ஏதோ ஒரு காரணங்களுக்காக விடுப்பு கேட்பவர் கிடையாது. நம் கிரிக்கெட் வீரரை நாம் நம்ப வேண்டும், அவரை ஆதரிக்க வேண்டும்" என்று கூறினார்.
கடைசியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டி தொடரில் ஜனவரி மாதம் விராட் கோலி விளையாடியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |