ஜேர்மன் தலைவரை சந்திக்காமல் வலதுசாரிக் கட்சித் தலைவரை சந்தித்த அமெரிக்க துணை ஜனாதிபதியால் அதிர்வலைகள்
ஜேர்மனிக்குச் சென்றுவிட்டு, ஜேர்மன் தலைவரை சந்திக்காமல், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சியின் தலைவரை சந்தித்துச் சென்றுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதி.
அவருடைய இந்த செயல் ஜேர்மன் அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவரை சந்திக்கவேண்டிய அவசியம் இல்லை
அமெரிக்க துணை ஜனாதிபதியாக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள JD வேன்ஸ், நேற்று வெள்ளிக்கிழமையன்று, ஜேர்மனியில் நடைபெற்ற மியூனிக் மாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டார்.
ஆனால், அவர் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸை சந்திக்காமல், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சியின் தலைவரான ஆலிஸ் வீடலை (Alice Weidel) சந்தித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் அமெரிக்க அதிகாரி ஒருவர், ஷோல்ஸை சந்திக்கவேண்டிய அவசியம் இல்லை, அவர் அதிக நாட்கள் சேன்ஸலராக இருக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், வலதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற மறுப்பதற்காக, ஐரோப்பிய தலைவர்களை கடிந்துகொண்டுள்ளார் வேன்ஸ்.
ஜேர்மனியில் இன்னும் சில வாரங்களில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேன்ஸின் இந்த செயல்கள், ஜேர்மன் அரசியலில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |