நூறைத் தாண்டிய பெருவெள்ள உயிரிழப்புகள்: நட்சத்திர ஹொட்டலில் சாப்பிட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்காவில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து உயிர் பலி வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஓட்டுப்போட்ட மக்களைக் குறித்து கவலைப்படாமல் நட்சத்திர ஹொட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதி.
நூறைத் தாண்டிய பெருவெள்ள உயிரிழப்புகள்
வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள San Antonio நகரில் பெய்த கனமழையால் Guadalupe ஆற்றில் 45 நிமிடங்களில் தண்ணீர் மட்டம் 26 அடி உயர்ந்தது.
ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தைகள் உட்பட பலியானவர்கள் எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்போ, அவரது நிர்வாகத்தினரோ பெரிய அளவில் அது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.
மக்கள் துயரத்தில் மூழ்கியிருக்க, அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸ் (JD Vance), பாதுகாவலர்கள் வாகனங்கள் படை சூழ நட்சத்திர ஹொட்டலுக்கு குடும்பத்துடன் சாப்பிடச் சென்றுள்ளார்.
JD Vance getting booed after some sushi in San Diego ✨ I love our city pic.twitter.com/d3FjDP7Eu5
— L (@majinluu_) July 7, 2025
அதைக் கண்ட பொதுமக்கள் வேன்ஸுக்கு எதிராக குரல் எழுப்பும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதேபோல, ட்ரம்பிடம் ஊடகவியலாளர் ஒருவர், நீங்கள் ஃபெடரல் அவசரகால நிர்வாக ஏஜன்சிக்கு வழங்கும் நிதியை நிறுத்தியதுதான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே என கேட்க, ட்ரம்பின் பதில் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Trump Dodges Question on Federal Cuts Amid Texas Flood Deaths
— The Asian Chronicle (@AsianChronicle) July 7, 2025
As devastating floods claim lives in Texas, a reporter asked U.S. President Donald Trump:
“Democrats are blaming your federal cuts for the deaths over in Texas.”
Trump’s response:
“I can’t hear you,” he said,… pic.twitter.com/VQtFVkjCOc
நீங்கள் சொல்வது கேட்கவில்லை என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டுள்ளார் ட்ரம்ப்.
மேலும், டெக்சாஸ் பெருவெள்ள உயிரிழப்புகள் குறித்து அமெரிக்க முதல் பெண்மணியான மெலானியா ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
My heart goes out to the parents in Texas during this difficult time. I am holding you in my thoughts and sending prayers for strength, comfort, and resilience.
— First Lady Melania Trump (@FLOTUS) July 5, 2025
அதில் எந்த உணர்ச்சியும் இல்லை. கடமைக்கு, பிள்ளைகளை இழந்த பெற்றோரை நினைவுகூருகிறேன், உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் குறிப்பிட, மக்கள் கோபக்கருத்துக்களை பதிலாக கொடுத்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |