உங்கள் மனைவி பிள்ளைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள்: அமெரிக்க துணை ஜனாதிபதி மீது விமர்சனம்
அமெரிக்க துணை ஜனாதிபதி, முன்பின் யோசிக்காமல் சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்.
அவ்வகையில், புலம்பெயர்தல் குறித்து அவர் தெரிவித்த கருத்தொன்று கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
அமெரிக்கக் கனவை திருடும் புலம்பெயர்தல்
சமீபத்தில் சமூக ஊடகமான எக்ஸில் அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸ் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில், ’பெருமளவில் புலம்பெயர்தல் என்பது, அமெரிக்க கனவைத் திருடுவதாகும். அது எப்போதுமே இப்படித்தான் இருந்து வருகிறது.

அதுதான் உண்மை. இதற்கு மாறான கருத்துக்களை வெளியிடும் ஒவ்வொரு ஊடகமும், ஆய்வமைப்பும், அந்த அமைப்பால் பணக்காரர்களானவர்கள் பணம் கொடுப்பதால், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கடும் விமர்சனம்
வேன்ஸின் கருத்துக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. நீங்களும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் புலம்பெயர்ந்தவர்களைத்தான் திருமணம் செய்துள்ளீர்கள்.
Mass migration is theft of the American Dream. It has always been this way, and every position paper, think tank piece, and econometric study suggesting otherwise is paid for by the people getting rich off of the old system. https://t.co/O4sv8oxPVO
— JD Vance (@JDVance) December 7, 2025
முதலில் உங்கள் மனைவி பிள்ளைகளை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்புங்கள். அப்படியானால்தான் நீங்கள் உண்மையாக பேசுவதாக நாங்கள் நம்புவோம். உங்கள் மனைவி பிள்ளைகளுக்கு விமான டிக்கெட் எடுத்துவிட்டபின் அதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்னும் ரீதியில் கருத்துக்களை முன்வைத்துவருகிறார்கள் இணையவாசிகள்.
JD வேன்ஸின் மனைவியான உஷாவும், ட்ரம்பின் மனைவியான மெலானியாவும் புலம்பெயர்ந்தோர்தான். உஷா இந்திய பின்னணி கொண்டவர். மெலானியா, ஸ்லோவேனியா என்னும் மத்திய ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |