அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வாரா?
அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்க சில நாட்களே உள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள JD Vance மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வது தடைபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதி வேட்பாளர்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள JD Vance, ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சைனஸ் தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும், அதற்காகவே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும், அது நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைதான் என்றும் Vanceஇன் செய்தித்தொடர்பாளரான William Martin என்பவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வது தடைபடுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே Vance பணிக்குத் திரும்பிவிடுவார் என William தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |