இந்திய வம்சாவளியினரான அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி குறித்த விமர்சனத்தால் சர்ச்சை
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியின் மனைவி குறித்து, வெள்ளை மாளிகை முன்னாள் ஊடகச் செயலர் கூறியுள்ள சில கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.

அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி குறித்து விமர்சனம்

வெள்ளை மாளிகை முன்னாள் ஊடகச் செயலரான ஜென் (Jen Psaki), அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸ் (JD Vance) குறித்தும், அவரது மனைவியான உஷா (Usha Vance) குறித்தும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Jen Psaki says JD Vance in “scarier” than Donald Trump & suggests his wife Usha wants out of their marriage.
— Breaking911 (@Breaking911) October 21, 2025
“Blink 4 times. Come over here. We’ll save you.”pic.twitter.com/aqgcyhlXZo
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜென், ட்ரம்பை விட வேன்ஸ் பயங்கரமானவர் என்றும், அவரிடம் அவரது மனைவியான உஷா சிக்கித் தவிப்பதாகவும், அவரைக் காப்பாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உஷா குறித்து ஜென் முன்வைத்த விமர்சனம் தொடர்பில் அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த வேன்ஸ், ஜென்னுடைய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தகாத வகையிலான கருத்துக்கள் என்றும், இந்தக் கேள்விக்கு அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியே, அதாவது, தன் மனைவியே பதிலளிக்கலாம் என்றும் கூறினார்.
NEW: Vice President Vance laughs off Jen Psaki’s comments about his wife, Usha:
— Fox News (@FoxNews) October 23, 2025
“I think it’s disgraceful, but of course the second lady can speak for herself.”
“I am very lucky to have a wonderful wife, and I know — at least I hope — that my wife feels the same about me.”… pic.twitter.com/DprrMR1IbB
இப்படி ஒரு அருமையான மனைவி தனக்குக் கிடைக்க தான் கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்று கூறிய வேன்ஸ், ’என் மனைவியும் என்னைக் குறித்து அப்படித்தான் எண்ணுவார் என நான் நினைக்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உஷா என் பக்கத்தில் இருப்பது எனக்குக் கௌரவம் என்றும் கூறினார் வேன்ஸ்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |