கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல் சொன்ன துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் காலவரையற்று இருக்க உரிமை இல்லை என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
கிரீன் கார்டு
அமெரிக்காவில், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வசிக்கவும், வேலை செய்யவும் கிரீன் கார்டு வழங்கப்படுகிறது.
கிரீன் கார்டுகள் காலவரையின்றி, நிரந்தரமாக வசிப்பதற்கான அதிகாரப்பூர்வ அட்டையாக கருதப்பட்டு வந்தது.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், கிரீன் கார்டு குறித்த நேர்காணல் ஒன்றில் பேசியது, க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜே.டி.வான்ஸ்
இதில் பேசிய அவர், "ஒரு கிரீன் கார்டு வைத்திருப்பவருக்கு அமெரிக்காவில் இருக்க காலவரையற்ற உரிமை இல்லை. இது பேச்சு சுதந்திரம் பற்றியது இல்லை. தேசிய பாதுகாப்பைப் பற்றியது.
அமெரிக்க பொதுமக்களாக நாம் நமது தேசிய சமூகத்தில் யாரை சேர முடிவு செய்கிறோம் என்பதும் மிக முக்கியமானது.
.@VP: A green card holder doesn't have an indefinite right to be in the United States. This is not about 'free speech.' Yes, it's about national security — but more importantly, it's about who we, as American citizens, decide gets to join our national community. pic.twitter.com/gRGn1subOy
— Rapid Response 47 (@RapidResponse47) March 14, 2025
இந்த நபர் அமெரிக்காவில் இருக்கக்கூடாது என்று வெளியுறவுத்துறை செயலாளரும் ஜனாதிபதியும் முடிவு செய்தால், அவர்களுக்கு இங்கு தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை. அவ்வளவு தான்" என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் கிரீன் கார்டு வைத்துள்ள கலீல் என்னும் மாணவர் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிரான போராட்டங்களில் பங்கு வகித்ததற்காக கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு வான்ஸ் இந்த பதிலை அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |