முக்கிய விவரங்களை கசியவிட்ட ஜே.டி.வான்சின் இரகசிய சேவை முகவர்! அதிரடி நடவடிக்கை
அமெரிக்க துணை ஜனாதிபதியைப் பாதுகாக்கும் தனது பணி குறித்த முக்கிய விவரங்களை கசியவிட்டதால், ஜே.டி.வான்ஸிற்கு நியமிக்கப்பட்ட இரகசிய சேவை முகவர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
ஜே.டி.வான்ஸின் இரகசிய சேவை முகவர்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான ஜே.டி.வான்ஸின் இரகசிய சேவை முகவர், இரகசிய பாதுகாப்பு தகவல்களை ஒருவருடன் பகிர்ந்துகொண்டதாக தகவல் வெளியானது.
Photo: Reuters/Eduardo Munoz/File Photo
இதுதொடர்பாக கமெராவில் சிக்கிய இரகசிய முகவர் தோமஸ் எஸ்கோட்டோ என்று அடையாளம் காணப்பட்டார். அவர் சுமார் ஐந்து ஆண்டுகள் சேவையில் இருந்தார்.
The O'Keefe Media Group குழுமத்தின் கூற்றுப்படி, அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குடியேற்றக் கொள்கை மற்றும் ICE முகவர்களுக்கு எதிரான அவரது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
துணை இயக்குநர்
இதனைத் தொடர்ந்து அந்நபர் தற்போது நிர்வாக விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். அத்துடன் அவரது பாதுகாப்பு அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இரகசிய சேவைப் பிரிவின் துணை இயக்குநர் மேத்யூ குயின் கூறுகையில், "எங்கள் பாதுகாப்பில் உள்ளவர்களின் பாதுகாப்பு, தனியுரிமை அல்லது நம்பிக்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயலையும், அமெரிக்க இரகசிய சேவைப் பிரிவு சகித்துக்கொள்ளாது" என கூறியுள்ளார்.
US Secret Service
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |