ட்ரம்ப் மரணம்... ஜே.டி. வான்ஸின் ஒற்றைக் கருத்தால் தகிக்கும் சமூக ஊடகம்
சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் கடந்த இரண்டு நாட்களாகவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவனம் ஈர்த்து வருகிறார்.
ட்ரம்ப் மரணம்
இந்த முறை அவர் கவனம் ஈர்ப்பது உயிருடன் இருக்கும் அவரது மரண செய்தியால். பொதுவாக, ஜனவரில் பதவிக்கு வந்ததன் பின்னர் அவரது அரசியல் நகர்வுகள் மற்றும் வரி விதிப்புகள் அல்லது விதண்டா வாதமான அவரது கருத்துகளுக்காக சமூக ஊடகங்களின் கவனம் பெறுவார்.
ஆனால் தற்போது ட்ரம்ப் மரணம் என சமூக ஊடகங்களில் அவர் கவனம் ஈர்த்து வருகிறார். பலர் என்ன காரணம் என்றும், உண்மையிலேயே ட்ரம்ப் மரணமடைந்துள்ளாரா என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மட்டுமின்றி, அவரது உடல் நலன் தொடர்பிலும் கவலை எழுந்துள்ளது. உண்மையில் ட்ரம்ப் மரணம் என சமூக ஊடகத்தில் தீயாக பரவுவதன் பின்னணியில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் ஒற்றைக் கருத்தே காரணம்.
ஆகஸ்ட் 27ம் திகதி அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஜேடி வான்ஸ், நாட்டில் மிகப்பெரிய ஆபத்து நேர்ந்தால், ஜனாதிபதி பொறுப்பை ஏற்க தாம் தயார் என வான்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
தூண்டியிருக்கலாம்
மேலும், 79 வயதான ட்ரம்ப் உடல் தகுதியுடனும், சுறுசுறுப்புடனும் இருப்பதாக வலியுறுத்திய வான்ஸ், எதிர்பாராத நிகழ்வுகளை நிராகரிக்க முடியாது என்றும் கூறினார். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி நல்ல நிலையில் இருக்கிறார், மீதமுள்ள பதவிக் காலத்தை நிறைவேற்றப் போகிறார், அமெரிக்க மக்களுக்கு சிறந்த காரியங்களைச் செய்வார் என்பதில் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார்.
இந்த நிலையில் வான்ஸின் கருத்துக்கள் இந்தப் போக்கைத் தூண்டியிருக்கலாம் என்றே கூறுகின்றனர். மட்டுமின்றி ட்ரம்ப் சமீபத்தில் உடல்நலக் கவலைகளையும் எதிர்கொண்டார்.
ட்ரம்புக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பதை ஜூலை மாதம் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. இதனால் வீங்கிய கால்களுடன் ட்ரம்ப் பொது நிகழ்ச்சிகளில் காணப்பட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது இரண்டு கொலை முயற்சிகளில் இருந்தும் ட்ரம்ப் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |