நீண்ட காலம் வெள்ளைப்படுதல் பிரச்சினையால் அவதியா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்
பொதுவாக பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான். வெயில் காலத்தில் இதன் தீவிரம் அதிகமாக இருக்கலாம் இது அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
ஆனால் சில நேரங்களில் அது ஏதோவொரு பிரச்னையின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னை குறித்து பெரும்பாலானவர்களிடம் போதிய விழிப்புணர்வு கிடையாது.
குறிப்பாக வெள்ளைப்படுதல் துர்நாற்றம் வீசுவதும், நிறம் மாறுவதும், அதிகப்படியான ஒழுக்கும் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் ஆகும்.
இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து தீர்ப்பது அவசியமானதாகும். இதற்கு சீரகம் பெரிதும் உதவுகின்றது. தற்போது அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
தேவை
- சீரகம் - 50 கிராம்
- உலர்ந்த ரோஜா இதழ் - 50 கிராம்
- தண்ணீர் - 500 கிராம்
- சர்க்கரை - 250 கிராம்
செய்முறை
சீரகம் பிறகு உலர்ந்த ரோஜா இதழ் தண்ணீரில் கலந்து அடுப்பில் வைக்கவும். இவை பாதியாக சுண்டும் வரை வைத்து நன்றாக கலக்கவும்.
சீரகமும் ரோஜா இதழ்களும் கலந்து மசியும் வரை கரண்டியால் கைவிடாமல் கிளறி எடுக்கவும்.
பிறகு இதில் சர்க்கரை சேர்த்து கை விடாமல் மீண்டும் கிளறி பாகு பதம் வந்ததும் இறக்கி விடவும் ஆறியதும் கண்ணாடி பாத்திரத்தில் சேர்த்து விடவும். பிறகு காலை மாலை என ஒரு டீஸ்பூன் இதை எடுத்துவர வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில், இதை எடுக்க வேண்டும். மாலை நேரத்தில் மதிய உணவுக்கு பிறகு 2 மணி நேர இடைவெளியில் இதை எடுக்க வேண்டும்.
வெள்ளைப்படுதல் கட்டுக்குள் வரும் வரை இதை எடுக்கலாம். இவை எந்த பக்கவிளைவையும் உண்டாக்காது என்பதால் தயக்கமில்லாமல் எடுக்கலாம்.
குறிப்பு
இதை தயாரிப்பது சிரமமாக இருந்தால் சீரகம்- 2 கிராம், நாட்டுச்சர்க்கரை - 2 கிராம் சம அளவு கலந்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும். பிறகு பால் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் நீங்கும். எந்த வயதிலும் இதை குடித்து வரலாம். நீண்ட கால வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தாலும் இவை சரியாக்கிவிடும்.
வெள்ளைப்படுதல் அசாதாரணமாக இருந்தால் தவிர்க்காமல் இந்த வைத்தியம் முயற்சிக்கலாம்.