உடல் எடையை குறைக்க சீரக நீர் அல்லது சியா விதை நீர்.., எது சிறந்தது?
உடல் பருமன் தற்போது பலருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது.
இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
எனவே உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல வாழ்க்கை முறை அவசியம்.
இயற்கை முறையில் எடையைக் குறைக்க பலர் சீரக நீர் மற்றும் சியா விதை நீரை அருந்துகின்றனர்.
அந்தவகையில், உடல் எடையை குறைக்க சீரக நீர் அல்லது சியா விதை நீரில் எது சிறந்தது என்பதை பார்க்கலாம்.

சீரக நீரின் நன்மைகள்
- ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது.
- செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
- உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.
- ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- கலோரிகள் குறைவாக உள்ளன.
சியா விதை நீரின் நன்மைகள்
- நார்ச்சத்து, தாவர புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
- கால்சியம், மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
- நீரில் ஊறிய பிறகு விரிவடைந்து வயிறு நிறைந்த உணர்வை தருகிறது.
- பசியைக் கட்டுப்படுத்தி, அதிகமாக சாப்பிடுவதை குறைக்க உதவுகிறது.
- எடை குறைக்கும் காலத்தில் தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

எப்போது குடிக்கலாம்?
சீரக நீர்: காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். நாள் முழுவதும் சாதாரண நீருக்கு பதிலாகவும் அருந்தலாம்.
சியா விதை நீர்: காலை உணவுக்குப் பிறகு அல்லது டீ, காபி நேரத்தில் குடிக்கலாம். இதனால் ஜங்க் உணவுகளின் மீதான விருப்பம் குறையலாம்.
எது சிறந்தது?
செரிமானத்தை மேம்படுத்தவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் விரும்பினால் சீரக நீர் நல்ல தேர்வாகும்.
நீண்ட நேரம் பசி இல்லாமல் இருக்கவும், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் விரும்பினால் அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் கொண்ட சியா விதை நீர் சிறந்த தேர்வாக இருக்கும்.
இரண்டையும் சமநிலையான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |