LIC: தினமும் ரூ.252 செலுத்தினால் ரூ.54 லட்சத்தை அள்ளலாம்
LIC அதன் வாடிக்கையாளர்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான், LIC ஜீவன் லாப் பாலிசி(Jeevan-labh-policy).
LIC ஜீவன் லாப் பாலிசி(Jeevan-labh-policy) வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகியவற்றை சேர்த்தே வழங்குகிறது.
இந்தத் திட்டத்திற்கும், பங்குச் சந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, எனவே பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றம் உங்கள் முதலீட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
குழந்தைகளின் திருமணச் செலவு, கல்விக் கட்டணம், சொந்த வீடு வாங்கும் கனவு முதலானவற்றை நிறைவேற்ற இந்தத் திட்டத்தின் முதலீடு செய்யலாம்.
திட்டத்தின் பயன்
முதிர்வு பயன்: காப்புத்தொகை + போனஸ்+ இறுதிக்கூடுதல் போனஸ்.
இறப்பு பயன்: காப்புத்தொகை (காப்புத் தொகையாக பாலிசியில் குறிப்பிடப்படும் அடிப்படை காப்புத்தொகை (அல்லது) செலுத்தும் வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு (அல்லது) பாலிசி காலத்தில் செலுத்தும் மொத்த பிரியத்தின் 105% மடங்கு. இவற்றில் எது அதிகமோ அத்தொகை வழங்கப்படும் + போனஸ் + இறுதிக் கூடுதல் போனஸ்).
இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்தினருக்கு கூடுதலாக (மரணம் அடைந்ததற்கான தொகை+ ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக வழங்கப்படும் போனஸ்) ஆகியவை வழங்கப்படும்.
இந்தத் திட்டம் முடிவடைவதற்குள் திட்டதாரர் தன் முதலீடு முழுவதுமாக செலுத்தியிருந்தால், (மரணம் அடைந்ததற்கான தொகை+ ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக வழங்கப்படும் போனஸ்+ கூடுதல் போனஸ்) வழங்கப்படும்.
திட்ட காலம்
- இத்திட்டத்தில் 8 வயது முதல் 55 வயது உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
- அதிகபட்ச முதிர்வு வயது: 75 ஆண்டுகள்
- பிரீமியம் செலுத்தும் முறை: ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, ECS மற்றும் ESS
திட்ட காலம் | பிரிமீயம் செலுத்தும் காலம் | அதிகபட்ச நுழைவு வயது |
16 ஆண்டுகள் | 10 ஆண்டுகள் | 59 ஆண்டுகள் |
21 ஆண்டுகள் | 15 ஆண்டுகள் | 54 ஆண்டுகள் |
25 ஆண்டுகள் | 16 ஆண்டுகள் | 50 ஆண்டுகள் |
காப்பு தொகை
- குறைந்தபட்ச காப்புத் தொகை : ரூ. 2 லட்சம்
- அதிகபட்ச காப்புத் தொகை: உச்சவரம்பு எதுவும் இல்லை
அதிகபட்ச காப்புத் தொகைக்கான தள்ளுபடி
- 5 லட்சம்: 1.25%
- 10 லட்சம்: 1.50%
- 15 லட்சம்: 1.75%
ஜீவன் லாப் பாலிசி(Jeevan-labh-policy) சிறப்பம்சங்கள்
- கல்விக் கட்டணம், சொந்த வீடு கட்ட, திருமண காலத்திற்கு உபயோகமானது.
- குறைவான காலத்திற்கு பணம் செலுத்தி நீண்ட கால காப்பீடுப் பயன் பெறும் வாய்ப்பு.
- மேலும், அதிக பலன்கள் பெறும் வாய்ப்பு.
- 80cன் கீழ் வரி விலக்கு (ரூ. 1.50 லட்சம் வரை) முதிர்வு தொகைக்கு வரி விலக்கு உண்டு.
- விபத்து மற்றும் உடல் செயலிழப்பிற்கு ரூ. 1 கோடி வரை காப்புத் தொகை பெற்றுக் கொள்ளும் வசதி.
- கூடுதல் காப்பீடு ரைடர் பெறும் வசதி.
- பாலிசி கடன் மற்றும் சரண்டர் வசதி உண்டு.
- மேலும் முன் தேதியிட்டு பாலிசி பெறும் வசதி உண்டு.
உதாரணம்
ஒருவர் ஜீவன் லாப் பாலிசியை 25 வயதில் எடுத்தால், அவர் மாதம் ரூ.7,572 அல்லது ஒரு நாளைக்கு ரூ.252 முதலீடு செய்ய வேண்டும். அதாவது, இந்த திட்டத்தில், ஆண்டுக்கு ரூ.90,867 டெபாசிட் செய்யப்படும்.
அவர் சுமார் ரூ. 20 லட்சம் டெபாசிட் செய்வார் எனில், முதிர்வு முடிந்ததும், பாலிசிதாரர் ரூ.54 லட்சம் தொகையைப் பெறுவார்.
நீங்கள் LIC-ன் Life Benefitல் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு Reversionary bonus மற்றும் இறுதி கூடுதல் Bonus வழங்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |